வடமாநில தொழிலாளர்களிடம் ரூ.1 லட்சம் திருட்டு


வடமாநில தொழிலாளர்களிடம் ரூ.1 லட்சம்  திருட்டு
x

சீர்காழியில் வடமாநில தொழிலாளர்களிடம் ரூ.1 லட்சம் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்து வருகின்றனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

சீர்காழி அருகே தென்பாதி மெயின் ரோடு ஓரத்தில் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மேத்தா மகன் வினோத் (வயது30).இவருடன் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலை ஓரத்தில் கூடாரம் அமைத்து கடந்த 5 நாட்களாக அரிவாள், அரிவாள்மனை, கத்தி, கோடரி உள்ளிட்டவை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு அனைவரும் கூடாரத்தில் குடும்பத்துடன் தூங்கி உள்ளனர். அப்போது வினோத் தனது தலைமாட்டில் பணப் பையை வைத்து தூங்கி கொண்டிருந்தபோது மர்ம நபர்கள், அந்த பையில் இருந்த ரூ.1 லட்சத்தை திருடி சென்று விட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது பணப்பையை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த வினோத் மற்றும் குடும்பத்தினர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story