அரசு பள்ளியில் ரூ.12 ஆயிரம் பொருட்கள் திருட்டு
ஆழியூரில் அரசு பள்ளியில் ரூ. 12ஆயிரம் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே ஆழியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் இருந்த ரூ.2 ஆயிரம் மதிப்பிலான அடிபம்பு, ரூ 8 ஆயிரம் மதிப்பிலான மின்மோட்டார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் அறையில் உள்ள பீரோ உடைத்து அதில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் உள்பட ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் நீலமேகம் கீீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story