முன்னாள் ராணுவ வீரர் மனைவி மொபட்டில் வைத்த ரூ.2¼ லட்சம் திருட்டு
முன்னாள் ராணுவ வீரர் மனைவி மொபட்டில் வைத்த ரூ.2¼ லட்சம் திருட்டு போயுள்ளது.
ஜோலார்பேட்டை
முன்னாள் ராணுவ வீரர் மனைவி மொபட்டில் வைத்த ரூ.2¼ லட்சம் திருட்டு போயுள்ளது.
ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சுவிதா (வயது 42), நேற்று காலை தனது மொபட்டில் சந்தைகோடியூரில் உள்ள வங்கியில் ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்தை செலுத்துவதற்காக மகன் மற்றும் உறவினர் மகன் ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள வங்கிக்கு வந்து கொண்டிருந்தார்.
மொபட்டில் பணத்தை வைத்து அதனை வங்கி எதிரே நிறுத்தி விட்டு வங்கி உள்ளே சென்றார். அங்கு பணத்தை டெபாசிட் செய்ய விசாரித்து விட்டு வெளியே வந்தார்.
அங்கு நிறுத்தி வைத்து இருந்த மொபட்டில் பணத்தை எடுக்க சென்ற போது பணத்தை மர்ம நபர்கள் யாரோ பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து சுவிதா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலிசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர் கேமராவில் மர்ம ஆசாமிகள் யாரோ இருவர் மாஸ்க் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மொபட்டை ஒருவர் திறக்க மற்றொருவர் பணத்தை எடுப்பது போல பதிவாகியுள்ளது. இதனை வைத்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
=========