ஓடும் பஸ்சில் வியாபாரியிடம் ரூ.3 லட்சம் திருட்டு


ஓடும் பஸ்சில் வியாபாரியிடம் ரூ.3 லட்சம் திருட்டு
x

ஓடும் பஸ்சில் வியாபாரியிடம் ரூ.3 லட்சம் திருட்டுபோனது.

திருச்சி

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள காமராஜர் வீதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 51). இவர் சமையல் எண்ணெய் நிறுவனம் வைத்து நடத்தி வருவதாக தெரிகிறது. சம்பவத்தன்று இவர் திருச்சி வந்து காந்தி மார்க்கெட் அஞ்சுமன் பஜார் பகுதியில் உள்ள ஒரு சமையல் எண்ணெய் கடைக்கு சென்று ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 500-ஐ வாங்கிக்கொண்டு அவரது பையில் வைத்துவிட்டு ஊருக்கு செல்வதற்காக காந்தி மார்க்கெட் பகுதியில் அரசு பஸ்சில் ஏறி திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் பஸ்சில் இருந்து இறங்கி தனது பையை திறந்த பார்த்தபோது, அதில் வைத்திருந்த ரூ.3 லட்சம் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சில் பணத்தை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Next Story