டிரைவா் வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் திருட்டு
வளவனூர் அருகே டிரைவர் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவசி தேடி வருகின்றனர்.
வளவனூர்,
மினிலாரி டிரைவர்
வளவனூர் அருகே உள்ள பனங்குப்பம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தேசிங்கு. மினி லாரி டிரைவராக இவர், சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் வேலூரில் உள்ள தனது மகனை பார்க்க சென்றார். பின்னர் அவர் குடும்பத்துடன் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது அவருடைய வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த தேசிங்கு மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6¾ பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை.
வலைவீச்சு
தேசிங்கு குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.