மூதாட்டியிடம் ரூ.5 ஆயிரம் திருட்டு


மூதாட்டியிடம் ரூ.5 ஆயிரம் திருட்டு
x

தள்ளுவண்டியில் பழங்கள் விற்பனை செய்த மூதாட்டியிடம் ரூ.5 ஆயிரம் திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழியில், சட்டநாதர் காலனி அருகே புதிய பஸ் நிலையம் செல்லும் பாதையில் அம்சவல்லி என்ற மூதாட்டி தள்ளுவண்டியில் பழங்கள் வைத்து விற்பனை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை தண்ணீர் குடிக்க அந்த பகுதியில் ஒரு இடத்துக்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்டு மர்ம நபர் ஒருவர் பழக்கடையில் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை திருடி சென்று விட்டார். தண்ணீர் குடிக்க சென்று விட்டு மூதாட்டி திரும்பி வந்து பார்த்த போது கல்லாப் பெட்டியில் இருந்த பணத்தை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். மூதாட்டியின் கல்லாப்பெட்டியில் இருந்து பணத்தை மர்ம நபர் திருடி செல்லும் காட்சி அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.


Next Story