ஆவின் பால் கொள்முதல் நிலையம், மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.54 ஆயிரம் திருட்டு


ஆவின் பால் கொள்முதல் நிலையம், மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.54 ஆயிரம் திருட்டு
x

வேப்பந்தட்டை அருகே ஆவின் பால் கொள்முதல் நிலையம், மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.54 ஆயிரம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெரம்பலூர்

ஆவின் பால் கொள்முதல் நிலையம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள விஜயபுரம் கிராமத்தில் ஆவின் பால் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தை நேற்று முன்தினம் மாலை பால் பண்ணை விற்பனையாளர் இளங்கோவன் வேலை முடிந்தவுடன் கொள்முதல் நிலையத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று காலை வழக்கம்போல் பால் கொள்முதல் நிலையத்தை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பால் எடை போடும் எந்திரம் மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

வலைவீச்சு

இதேபோல் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் பன்னீர்செல்வம் (வயது 47) என்பவரது கடையின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.34 ஆயிரத்தை திருடி சென்று உள்ளனர். மேலும் அதே பகுதியில் உள்ள தனக்கொடி (70) என்ற மூதாட்டி வீட்டில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தையும் மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story