ஜவுளிக்கடையில் ரூ.6 லட்சம் திருட்டு


ஜவுளிக்கடையில் ரூ.6 லட்சம் திருட்டு
x

ராஜபாளையத்தில் ஜவுளிக்கடையில் ரூ.6 லட்சத்தை திருடி சென்றனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் சிங்கராஜாகோட்டை தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). இவர் ராஜபாளையம்-தென்காசி சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். பின்னர் மறுநாள் காலையில் மேற்பார்வையாளர் பாண்டி என்பவர் கடையை திறந்தார். அப்போது ஜவுளிக்கடையில் இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சத்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் செல்வராஜிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story