விவசாயி வீட்டில் ரூ.25 ஆயிரம் திருட்டு


விவசாயி வீட்டில்  ரூ.25 ஆயிரம் திருட்டு
x

விவசாயி வீட்டில் ரூ.25 ஆயிரம் திருட்டுபோனது

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே உள்ள சொக்கநாதன்பட்டி ரோடு கப்பலூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 47). விவசாயி. இவர் நேற்று சொந்த வேலையாக திருமங்கலம் வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டு கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.25 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. முருகன் இது குறித்து திருமங்கலம் நகர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story