குடோன் சுவரில் துளையிட்டு ரூ.85 ஆயிரம் திருட்டு


குடோன் சுவரில் துளையிட்டு ரூ.85 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புதுகோவிந்தபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையின் அருகே அமேசான் குடோன் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஊழியர்கள் குடோனை மூடிவிட்டு சென்றுள்ளனர். நேற்று காலை ஊழியர்கள் குடோனை திறந்து உள்ளனர். அப்போது சுவரில் ஆள் போகும் அளவிற்கு துளை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உள்ளே சென்று பார்த்தபோது ரூ.85 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்ததும் ஆம்பூர் டவுன் போலீசார் சென்று பார்வையிட்டனர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story