சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
கள்ளக்குறிச்சி போலீஸ் குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி,
சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக மணிகண்டன் என்பவர் பணியாற்றி வருகிறார். கள்ளக்குறிச்சி போலீஸ் குடியிருப்பில் வசிந்து வந்த அவர், சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை குடியிருப்பு வளாகத்தில் நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருடுபோன மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. போலீஸ் குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story