கோவில் உண்டியல் திருட்டு


கோவில் உண்டியல் திருட்டு
x

கோவில் உண்டியல் திருடுபோனது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தேவையூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் பூஜை முடிந்து கோவிலை பூட்டிவிட்டு பூசாரி மருதமுத்து (வயது 50) வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அவர் நேற்று காலை கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கோவில் உண்டியலும் திருடு போயிருந்தது. இது தொடர்பாக புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி கோவில் உண்டியலை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story