இருசக்கர வாகனங்கள் திருட்டு; சகோதரர்கள் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு


இருசக்கர வாகனங்கள் திருட்டு; சகோதரர்கள் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு
x

இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் சகோதரர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இருசக்கர வாகனங்களை திருடும் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில் லாடபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பார்த்திபன், அவரது தம்பி மணிவண்ணன், களரம்பட்டியை சேர்ந்த நாகராஜ் மகன் சந்துரு(வயது 21) மற்றும் 18 வயதுடைய சிறுவன் ஆகிய 4 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபன், மணிவண்ணன், சந்துரு ஆகிய 3 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சிறுவனை ஜாமீனில் விடுவித்தனர்.


Next Story