திட்டக்குடி அருகே 50 வீடுகளில் குடிநீர் குழாயில் இருந்த தண்ணீர் திறப்பான்கள் திருட்டு


திட்டக்குடி அருகே 50 வீடுகளில் குடிநீர் குழாயில் இருந்த தண்ணீர் திறப்பான்கள் திருட்டு
x

திட்டக்குடி அருகே 50 வீடுகளில் குடிநீர் குழாயில் இருந்த தண்ணீர் திறப்பான்கள் திருடுபோனது.

கடலூர்

திட்டக்குடி,

திட்டக்குடி அருகே உள்ளது கோடங்குடி கிராமம். கிராம மக்களுக்கு அவர்களது வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்து அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்ட பணியானது ரூ. 13 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் இருந்த குழாயில், தண்ணீர் வருவதற்கான திறப்பான் பித்தளையால் ஆனதாகும். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வாசல் முன்பு இருந்த குடிநீர் குழாயில் இருந்த தண்ணீர் திறப்பானை மட்டும் மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் சார்பில் திட்டக்குடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story