தேனி கலெக்டர் அலுவலகத்தில்மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்


தேனி கலெக்டர் அலுவலகத்தில்மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் மனு கொடுக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாற்றுத்திறனாளிகள் வந்தனர். வங்கிக்கடன், பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள், இலவச வீட்டுமனைப்பட்டா, ரேஷன் கார்டு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 163 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தின்போது, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஆவின் பாலகம் அமைக்க வங்கிக்கடன் மானியம் ரூ.50 ஆயிரம் பெறுவதற்கான உத்தரவை கலெக்டர் வழங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் நடந்து கொண்டு இருந்த போது, ஜெயமங்கலம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தங்கள் ஊராட்சியில் 100 நாட்கள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்.

அப்போது அவர் தன்னை ஒரு அரசியல் கட்சியின் பேச்சாளர் என்றும் கூறினார். இதனால் அவரை போலீசார் அங்கிருந்து தேனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அவருக்கு அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story