பரிமள ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்
மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம் திரளான பக்தர்கள் சாமி தாிசனம் செய்தனர்
மயிலாடுதுறை அருகே திருவிழந்தூரில் பிரசித்தி பெற்ற பரிமள ரெங்கநாதா் கோவில் ஆகும். 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது திவ்யதேசமாக இந்த கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.இதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூமாதேவி பரிமளரெங்கநாதர் பெருமாள் கோவில் திருக்குளத்தில் மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க எழுந்தருள செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, 3 முறை தெப்பம் திருக்குளத்தைச் சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கோவில் செயல் அலுவலர் ரம்யா, நகராட்சி துணைத் தலைவர் சிவக்குமார், நகர்மன்ற உறுப்பினர் ரிஷிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.