தாடாளன் பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா


தாடாளன் பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி தாடாளன் பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 28-வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் என்னும் திருவிக்ரம நாராயணப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு மூலவர் பெருமாள் தனது இடது பாதத்தை வான் நோக்கி தூக்கி உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வாக தெப்ப திருவிழா நேற்று முன் தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, புஷ்ப அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் லோகநாயகி தாயாருடன் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை சுற்றிவந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story