கவர்னர்கள் அவமதிப்பால் மகிழும் கூட்டம் தமிழகத்தில் உள்ளது - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு


கவர்னர்கள் அவமதிப்பால் மகிழும் கூட்டம் தமிழகத்தில் உள்ளது - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
x

கவர்னர்கள் அவமதிப்பால் மகிழும் கூட்டம் தமிழகத்தில் உள்ளது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கவரனர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்று முரசொலியில் செய்தி வெளியிட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

"கவர்னர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழும் கூட்டம் தமிழகத்தில் உள்ளது. நான் அதை பற்றி கவலைப்படவில்லை. நான் எங்கும் அவமதிக்கப்படவும் இல்லை, அலறவும் இல்லை. புலியை முறத்தினால் அடித்த பரம்பரையில் வந்தவள் நான்.

இன்னொரு மாநிலத்தில் நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதரி மதிக்கப்படவில்லை என்று இங்கு உள்ளவர்கள் மனநிலை இருந்தால் அதற்கு நான் ஒன்றும் சொல்ல முடியாது." என்று தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

அதனை தொடர்ந்து பேசுகையில்,

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. தேசிய கல்வி கொள்கையில் குறைபாடுகள் இருந்தால் அதை அரசிடம் சுட்டிக் காட்டலாம். அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்வது சரியானதாக இருக்காது.

தேசிய கல்விக் கொள்கையை அரசியலாக்க வேண்டாம் என்றே நான் சொல்கிறேன். அனைவருக்கும் ஒன்றுபட்ட சமச்சீர் கல்வி கிடைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அகில இந்திய தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களை தயார் செய்வது அவசியம். தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களும் பெற்றோர்களும் தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதை முழுவதும் படித்து விட்டு எதனால் மறுக்கிறீர்கள் என்று கருத்து சொல்ல வேண்டும்.

மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து குழு அமைக்கப்பட்டு, ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்களிடம் கருத்துக் கேட்கப்பட்ட பின்னரே முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது பள்ளி குழந்தைகளின் மேம்பாட்டிற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளிக் குழந்தைகள் தேர்வு எழுத தயாராக இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story