நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீட் விலக்கு குறித்த மத்திய அரசின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தினாலும் மறுப்பு தெரிவிக்கவில்லை. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story