சென்னை: கோயம்பேட்டில் இன்று தக்காளி விலையில் மாற்றமில்லை..!


சென்னை: கோயம்பேட்டில் இன்று தக்காளி விலையில் மாற்றமில்லை..!
x
தினத்தந்தி 9 Aug 2023 8:54 AM IST (Updated: 9 Aug 2023 10:26 AM IST)
t-max-icont-min-icon

தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை சற்று குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சத்தில் இருந்தது. தமிழ்நாட்டிலும் தக்காளி விலை உச்சத்தில் இருந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து தமிழக அரசு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையை தொடங்கியது.

இதனிடையே, சென்னை கோயம்பேட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளி விலையில் மாற்றமில்லை. அதன்படி ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நவீன் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. தக்காளி வரத்து சற்று அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், பெரிய வெங்காயம் ரூ.22-க்கும், உருளைகிழங்கு ரூ.33-க்கும், சின்ன வெங்காயம் ரூ.80-க்கும், ஊட்டி கேரட் ரூ.60-க்கும், பீன்ஸ் ரூ.50-க்கும், பீட்ரூட் ரூ.40-க்கும், வெண்டைக்காய் ரூ.30-க்கும், இஞ்சி ரூ.210-க்கும், மாங்காய் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story