தொழிலாளியை பிணமாக எடுத்து வந்ததால் பரபரப்பு


தொழிலாளியை பிணமாக எடுத்து வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவுக்கு கரும்பு வெட்ட சென்ற தொழிலாளியை பிணமாக எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

புவனகிரி,

புவனகிரி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்த ஸ்டாலின் (வயது 38). தொழிலாளி. இவர் ஆந்திராவுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றார். இவருடன் மேலும் சில தொழிலாளர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்று இருக்கிறார்கள்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கரும்பு வெட்டும் வேலையில் இருந்த ஸ்டாலின் தினசரி, தனது மனைவி சங்கீதா, குழந்தைகளிடம் போனில் பேசி வந்துள்ளார். ஆனால், சில நாட்களாக அவர் போனில் பேசவில்லை. இந்நிலையில் நேற்று, காரில் வந்த சிலர், ஸ்டாலினை பிணமாக எடுத்து வந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அவரது உடலை பார்த்ததும், குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனால், அந்த பகுதிமக்கள் சோகத்தில் மூழ்கினர்.

இதற்கிடையே, , இறந்து போன ஸ்டாலின் உடம்பில் பல்வேறு இடங்களில் வெட்டு காயம் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஸ்டாலினின் மனைவி சங்கீதா மருதூர் போலீசில் புகார் செய்தார். அதில், தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்டாலின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்புநிலவியது.


Next Story