வீடுகளில் கருப்பு கொடி கட்டியதால் பரபரப்பு
வீடுகளில் கருப்பு கொடி கட்டியதால் பரபரப்பு
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட இம்மிடிபாளையம் கிராமத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கப்படாததை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன்(வயது 42) என்பவர் கூறும்போது, அரசு பள்ளிகள் திறந்து 3 மாதங்கள் ஆகியும் மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்பட பலரிடம் கோரிக்கை வைத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துகிறோம் என்றார்.
இதற்கிடையில் அவர் பொய் பிரசாரம் செய்வதாக கிணத்துக்கடவு போலீசில், தி.மு.க. பிரமுகர் ஒருவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், மணிகண்டனிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
------------------