காத்திருப்பு போராட்டம் நடத்த வந்தவர்களால் பரபரப்பு


காத்திருப்பு போராட்டம் நடத்த வந்தவர்களால் பரபரப்பு
x

காத்திருப்பு போராட்டம் நடத்த வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி


மக்கள் உரிமை கூட்டணி தெற்கு மாவட்ட செயலாளர் ஜோசப் என்பவரை கடந்த மாதம் 16-ந் தேதி 6 பேர் வழிமறித்து தாக்கி செல்போனை பறித்ததாகவும், இது குறித்து திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை காத்திருப்பு போராட்டம் நடத்த மக்கள் சேவை கூட்டணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமணா தலைமையில், தமிழ்புலிகள் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரண்டு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி மனு அளிக்க போலீசார் அழைத்துச்சென்றனர். அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவரிடம் மனு அளித்துவிட்டு சென்றனர்.


Next Story