ரெயில்- பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது


ரெயில்- பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது
x

தீபாவளி பண்டிகை முடிந்து ஏராளமானோர் வெளியூர்களுக்கு புறப்பட்டதால் ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

தீபாவளி பண்டிகை முடிந்து ஏராளமானோர் வெளியூர்களுக்கு புறப்பட்டதால் ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கூட்டம் அலைமோதியது

குமரி மாவட்டத்தை ேசர்ந்த ஏராளமானோர் வேலை மற்றும் கல்வி நிமித்தமாக வெளியூர்களில் வசித்து வருகிறார்கள். அவர்கள் பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் சொந்த ஊரான குமரி மாவட்டத்துக்கு வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக வெளியூர்களில் வசிக்கும் குமரி மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

விடுமுறை முடிந்ததைத் தொடர்ந்து அவர்கள் நேற்று தாங்கள் வசிக்கும் ஊர்களுக்கு ரெயில்களிலும், பஸ்களிலும் புறப்பட்டு சென்றனர். இதனால் ரெயில் நிலையங்களிலும், பஸ் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அந்த வகையில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையங்களில் ஏராளமான பொதுமக்கள் ரெயிலுக்காக காத்திருந்தனர். அவர்கள் ரெயில்களில் முன்பதிவு அல்லாத பெட்டிகளில் போட்டி போட்டு ஏறினர்.

சிறப்பு பஸ்கள்

இதே போல் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒவ்வொரு பஸ்களிலும் பயணிகள் முந்தியடித்துக் கொண்டு ஏறினர்.

இதற்கிடையே பொதுமக்கள் நலன் கருதி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த வகையில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு 25 பஸ்கள், கோவை-15, திருப்பூர்-10, திருச்சி-6, தஞ்சை-1 என மொத்தம் 57 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்களிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது.


Next Story