அன்று 356வது சட்டப்பிரிவை பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்தது..அதை நாங்கள் மறுக்கவில்லை" -ப.சிதம்பரம்


அன்று 356வது சட்டப்பிரிவை பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்தது..அதை நாங்கள் மறுக்கவில்லை -ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 10 Feb 2023 5:59 PM IST (Updated: 10 Feb 2023 6:01 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

சிவகங்கை,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதவாது:-

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி மாநில அரசின் ஆட்சிகள் கலைக்கப்பட்டதை யாரும் இல்லை என்று சொல்லவில்லையே. அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை பயன்படுத்தினார்கள். அதை தவறாக பயன்படுத்தியிருந்தால், அந்த அரசை மக்கள் அன்றைக்கே தண்டித்திருப்பார்கள். எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் சுப்ரீம் தீர்ப்புக்குப் பிறகுதான், ஒரு அரசை நீக்குவதற்கான வரைமுறைகள் வகுக்கப்பட்டன.

தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, மாநில அரசுகளை நீக்குவது கிடையாது. எதிர்க்கட்சியில் இருக்கின்ற எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிவிடுகின்றனர். ஓர் அரசை நீக்கிவிட்டு தேர்தல் நடத்தினால்கூட பரவாயில்லை. இவர்கள் விலைக்கு வாங்குகின்றனர்" என்றார்.



Next Story