டெண்டர் விவகாரத்தில் நடந்த பிரச்சினையில் நாற்காலி வெளியே வீசப்பட்டதால் பரபரப்பு
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெண்டர் விவகாரத்தில் நடந்த பிரச்சினையில் நாற்காலி வெளியே வீசப்பட்டதால் பரபரப்பு
ஆரணி
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெண்டர் விவகாரத்தில் நடந்த பிரச்சினையில் நாற்காலி வெளியே வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பொது நிதியின் மூலமாக 17 வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு ரூ.83 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் டெண்டர்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு இன்று (வியாழக்கிழமை) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாளின் கணவர் சீனிவாசன் சொல்லும் நபருக்கு மட்டுமே பணிகளை செய்ய டெண்டர் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அவ்வாறு ஒன்றிய குழு தலைவரின் கணவர் தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய குழு துணை தலைவருககு ஆதரவாக, பா.ம.க. உறுப்பினரர் ஏழுமலை அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவரின் கணவர் சீனிவாசன் அமர்வதற்காக போடப்பட்டிருந்த இருக்கையை அலுவலக வெளி வளாகத்தில் தூக்கி வீசினார். இதனால் அங்கு பரபரபபு ஏற்பட்டது.
இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி கூறுகையில், ''17 பணிகளுக்கு டெண்டர் விடுவதற்காக ஷெட்யூல் வழங்குவதற்கான கடைசி நாளையொட்டி 16 பணிகளுக்கு ஒப்பந்த புள்ளிகள் வரவேற்கப்பட்டுள்ளது. இதில் 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கண்ணமங்கலம் நகரில் இந்து ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தின் மேற்்கூரை புனரமைப்பு செய்யும் பணியை ஒன்றிய குழு துணை தலைவர் ஆ.வேலாயுதம், அவரது ஆதரவாளரான மணிகண்டனுக்கு வழங்க வேண்டும் என பரிந்துரைத்ததாக வருகிறது.
அதேபோல ஒன்றிய குழு தலைவரின் கணவரான சீனிவாசன் தனது ஆதரவாளரான ரமேேஷுக்கு அந்த பணியை வழங்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த பிரச்சினை சுமுகமாக முடிந்து விடும். நாற்காலி வெளியே தூக்கி போட்ட விவகாரம் பற்றி கேட்கிறீர்கள். அது குறித்த விவரம் எனக்கு தெரியாது'' என்றார்.