கோவில் திருவிழா நடத்தக்கோரி கிராம மக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு


கோவில் திருவிழா நடத்தக்கோரி கிராம மக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு
x

கோவில் திருவிழா நடத்தக்கோரி கிராம மக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

அரிமளம் ஒன்றியம் கீழாநிலைகோட்டை அருகே உள்ள கல்லூரை அடுத்த தெக்கூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்த கோவிலில் கடந்த சில ஆண்டுகளாக திருவிழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு திருவிழா நடத்த விழா கமிட்டியினர் முடிவு செய்தனர். அப்போது கோவில் வரி வசூல் செய்வது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் திருவிழா நடைபெறுவது தடைபடும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து தெற்கு கிராம பொதுமக்கள் இந்த ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழா திட்டமிட்டபடி நடத்தக்கோரி சாலை மறியல் செய்ய முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் கே.புதுப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இந்த ஆண்டு தலைக்கட்டிற்கு (குடும்பத்திற்கு) வரி வசூல் செய்யாமல் கோவில் பொது நிதியிலிருந்து திருவிழா நடத்தலாம். பொதுமக்கள் நன்கொடை கொடுத்தால் அதைப் பெற்றுக்கொண்டு திருவிழாவை நடத்த அறிவுறுத்தினார்கள். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story