எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் நாளை மின்தடை
எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
திருச்சி
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே டி.எஸ்.பி.கேம்ப், கிராப்பட்டி காலனி, கிராப்பட்டி, அன்புநகர், அருணாச்சலநகர், காந்திநகர், பாரதிமின்நகர், சிம்கோகாலனி, அரசு காலனி, ஸ்டேட்பேங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர், சொக்கலிங்கபுரம், ராமசந்திராநகர், ஆர்.எம்.எஸ்.காலனி, கே.ஆர்.எஸ்.நகர், ராஜீவ்காந்திநகர், கிருஷ்ணாபுரம் மற்றும் பஞ்சப்பூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருச்சி கிழக்கு மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story