சிறுவாச்சூர், செட்டிகுளம், வேப்பந்தட்டை, மருவத்தூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்


சிறுவாச்சூர், செட்டிகுளம், வேப்பந்தட்டை, மருவத்தூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
x

பராமரிப்பு பணிகள் காரணமாக சிறுவாச்சூர், செட்டிகுளம், வேப்பந்தட்டை, மருவத்தூர் பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர், எசனை, கிருஷ்ணாபுரம், பேரளி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி சிறுவாச்சூர் துணை மின்நிலையத்தை சேர்ந்த சிறுவாச்சூர், அயிலூர், தீரன் நகர், கவுல்பாளையம், விளாமுத்தூர், நொச்சியம், செல்லியம்பாளையம், மருதடி, நாட்டார்மங்கலம், செட்டிகுளம், பொம்மனபாடி, புதுநடுவலூர், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, ரெங்கநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் மற்றும் அயிலூர், நாரணமங்கலம், காரை, செட்டிகுளம், பெரகம்பி ஆகிய பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்களிலும் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது.

பெரம்பலூர் கிராமியத்துக்குட்பட்ட எசனை துணை மின் நிலையத்தை சேர்ந்த கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, செஞ்சேரி, எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டாபுதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர்.

கிருஷ்ணாபுரம் துணை மின்நிலையத்தை சேர்ந்த கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், முகமது பட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டகபாடி, உடும்பியம், வெங்கனூர், பெரியம்மாபாளையம், பிள்ளையார் பாளையம், தொண்டப்பாடி, ஈச்சங்காடு, பூம்புகார், பாலையூர், பெரிய வடகரை, வெண்பாவூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது.

பெரம்பலூர் நகரத்துக்குட்பட்ட பேரளி துணை மின்நிலையத்தை சேர்ந்த பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கீ.புதூர், எஸ்.குடிகாடு, வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி செயற்பொறியாளர்கள் ரவிக்குமார் (சிறுவாச்சூர்), செல்வராஜ் (பெரம்பலூர் கிராமியம்), மாலதி (கிருஷ்ணாபுரம்), முத்தமிழ்செல்வன் (பெரம்பலூர் நகர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story