டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு


டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு
x

மன்னார்குடியில், டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடியில், டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

டாஸ்மாக் கடை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பாலத்தை அடுத்த முத்துப்பேட்டை சாலை அருகே டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வழக்கம்போல் விற்பனை முடிந்து கடையை பூட்டி விட்டு விற்பனையாளர் மகேந்திரன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

நேற்று காலை டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு வாசலில் காலி அட்டைப்பெட்டிகள் சிதறி கிடந்துள்ளன. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் ெதரிவித்தனர்.

ரூ.40 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டாஸ்மாக் கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இரும்பு கம்பியால் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கடையில் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடிக்கொண்டு காலி அட்டை பெட்டிகளை கடையின் வாசலில் போட்டு விட்டு சென்றது தெரியவந்தது. டாஸ்மாக் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருட்டு நடந்த கடையில் இருந்த கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் பதிவு செய்தனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் தியாகராஜன் மன்னார்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story