வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டுசிலிண்டர், பாத்திரங்களையும் அள்ளிச்சென்றனர்


வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டுசிலிண்டர், பாத்திரங்களையும் அள்ளிச்சென்றனர்
x

ஜோலார்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்கள், சிலிண்டர் மற்றும் பாத்திரங்களையும் அள்ளிச்சென்றுள்ளனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்கள், சிலிண்டர் மற்றும் பாத்திரங்களையும் அள்ளிச்சென்றுள்ளனர்.

நகை-பணம் திருட்டு

ஜோலார்பேட்டை அருகே உள்ள சோலையூர் புது காலனி பகுதியை சேர்ந்தவர் டேவிட் பன்னீர்செல்வம். இவரது மனைவி ஸ்டெல்லா (வயது 42). கூலி தொழிலாளி. இவர் கணவனைப் பிரிந்து தனது 3 பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். ஸ்டெல்லா கடந்த மாதம் 22-ந் தேதி பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றார்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து கம்மல், மோதிரம் உள்ளிட்ட ஒரு பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம், கியாஸ் சிலிண்டர், சைக்கிள் மற்றும் அலுமினிய பாத்திரங்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

போலீஸ் விசாரணை

இது குறித்து ஸ்டெல்லா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே திருட்டை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story