77 மீட்டர் நீள தேசிய கொடியை ஊர்வலமாக எடுத்து சென்றனர்


77 மீட்டர் நீள தேசிய கொடியை ஊர்வலமாக எடுத்து சென்றனர்
x

ஒடுகத்தூரில் 77 மீட்டர் நீள தேசிய கொடியை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

வேலூர்

இந்திய சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரில் சுதந்திர தினத்தையொட்டி 77 மீட்டர் நீளம் கொண்ட மூவர்ண கொடியை தயாரித்து 300-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக எடுத்து சென்றனர். ஊர்வலத்தை முன்னாள் ராணுவ அதிகாரி ஞானசேகரன் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தொடங்கி வைத்தனர்.

ஊர்வலம் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒடுகத்தூர் பஸ் நிறுத்தம் வரை சென்றது. வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சங்கத் தலைவர் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story