"வீரவசனம் பேசிவிட்டு டெல்லி செல்கிறார்கள்" - அண்ணாமலை குற்றச்சாட்டு
இலவசம் என்னும் பெயரில் வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்ததாக தமிழக பாஜக தலைவர் குற்றம் அண்ணாமலை சாட்டினார்.
சென்னை,
திமுக அறிவித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், பாதிக்கும் மேற்பட்டவை தேவையில்லாத இலவசங்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் தனிக்கட்சி தொடங்கிய அர்ஜுன மூர்த்தி, மீண்டும் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில், அர்ஜுன மூர்த்திக்கு அண்ணாமலை உறுப்பினர் அட்டையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அண்ணாமலை, பொருளாதார திட்டமிடல் இல்லாமல், இலவசம் என்னும் பெயரில் வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்ததாகக் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டில் கம்பீரமாக பேட்டி அளித்துவிட்டு, டெல்லியில் பிரதமர் அறைக்குள் சென்று நிதியில்லை காப்பாற்றுங்கள் என முதல் அமைச்சர் கூறுவது எப்படி சரியாகும் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.