இரவு நேரத்தில் சமூக விரோதிகள் நடமாட்டத்தால் அச்சம்
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி 59-வது வார்டுக்கு உட்பட்ட முத்தனம்பாளையம் வாய்க்கால்மேடு பைவ்ஸ்டார் நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் 30-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் ஆணையாளர் கிராந்திகுமார் பாடியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'எங்கள் பகுதியில் 1-வது, 2-வது வீதியில் 65-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் வீதிகளில் தெருவிளக்கு வசதியில்லை. இதைப்பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் இரவு நேரத்தில் எங்கள் பகுதியில் வந்து மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இரவு நேரத்தில் பெண்கள் வெளியில் நடமாட அச்சம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் தெருவிளக்கு அமைத்துக்கொடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
Next Story