வீட்டின் பூட்டை உடைத்து பணம், வெள்ளி வளையல் திருட்டு
பல்லடம் அருகே பனியன் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்து பணம் மற்றும் வெள்ளி ெபாருட்களை திருடி சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருட்டு
பவானி அருகே உள்ள குமாரபாளையத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 40). இவர் பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 3-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு ஆயுத பூஜை கொண்டாட குமாரபாளையம் சென்று விட்டார்.
பின்னர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின் பக்க கதவு உடைந்து கிடந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.5 ஆயிரம், 2 வெள்ளி வளையல்கள், யுபிஎஸ் இன்வெர்ட்டர் ஆகியவை திருட்டு ேபாயிருந்தது.
போலீசில் புகார்
இந்த திருட்டு சம்பவம் குறித்து பல்லடம் போலீசில் ரவிக்குமார் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் மர்ம நபர் ஒருவர் ரவிக்குமார் வீட்டிற்குள் செல்வது தெரியவந்தது. இதைஅடுத்து அந்த மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.