அரிசி ஆலை பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு


அரிசி ஆலை பூட்டை உடைத்து   ரூ.1 லட்சம் திருட்டு
x
திருப்பூர்


அவினாசியை அடுத்து தெக்கலூரை சேர்ந்த சண்முகம் (வயது73). இவர் தனது அரிசி ஆலையில் ஒரு அறையில் அரிசி மூட்டைகளை வைத்து சில்லறை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு அரிசி ஆலை காம்பவுண்டில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டர். பிறகு நேற்று காலையில் அரிசி ஆலையின் கதவை திறக்க வந்தபோது மேற்கூரை சிமெண்டு சீட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அரிசி மூட்டை அறை கதவு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது அங்கிருந்த பீரோவை உடைத்தும், டேபிள் டியாரை கம்பியால் நெம்பி திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து சண்முகம் அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் அரிசி ஆலையில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மர்ம ஆசாமிகளின் தடயங்களை சேகரித்து சென்றனர்.


Next Story