பனியன் நிறுவனத்தில் ரூ.50 லட்சம் துணிகள் திருட்டு
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள துணிகளை திருடிய மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பனியன் நிறுவனம்
திருப்பூர்-மங்கலம் சாலையில் பனியன் துணி உற்பத்தி நிறுவனம் உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் ஒரு பகுதியில் குடோன் உள்ளது. அந்த குடோனில் சாயம் ஏற்றப்பட்ட பனியன் துணிகள் வைக்கப்பட்டு இருந்தன.
கடந்த சில மாதங்களாக இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் பனியன்கள் மற்றும் அதற்காக வாங்கி வைக்கப்பட்டு இருந்த துணிகளின் எடை ஆகியவற்றுக்கு இடையே முரண்பாடு இருந்தது. இதை அறிந்த நிறுவனத்தின் உரிமையாளர் குடோனில் ஆய்வு செய்தார். அப்போது பனியன் துணிகள் திருட்டுப்போனது தெரிய வந்தது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் திருப்பூர் மத்திய போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜமுனா மற்றும் போலீசார் பிரசாந்த், பிரகாஷ், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
ரூ.50 லட்சம் துணிகள்
இந்த தனிப்படை போலீசார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் பனியன் நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த நாகேந்திரன் (வயது 51) என்பவர் அதிகாலை நேரத்தில் குடோனில் இருந்து பனியன் துணிகளை திருடி வாகனத்தில் ஏற்றிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
மேலும் திருடிய பனியன் துணிகளை திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே பனியன் நிறுவனம் நடத்தி வந்த ஆறுமுகம் என்பவரிடம் நாகேந்திரன் விற்பனை செய்து வந்ததும், ரூ.600 மதிப்பிலான துணிகளை ரூ.200-க்கு விற்பனை செய்ததும், மொத்தம் 7 ஆயிரம் கிலோ துணிகளை விற்பனை செபனியன் நிறுவனத்தில் ரூ.50 லட்சம் துணிகள் திருட்டுபனியன் நிறுவனத்தில் ரூ.50 லட்சம் துணிகள் திருட்டுய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.50 லட்சம் என்று கூறப்படுகிறது.
2 பேர் கைது
இதனைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த நாகேந்திரன் மற்றும் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் நாகேந்திரன் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள பனியன் துணிகளையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
பனியன் துணிகளை திருடி விற்பனை செய்த பணம் வங்கியில் போடப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து ரூ.22 லட்சத்தையும் போலீசார் மீட்டனர். கைதான நாகேந்திரன் மற்றும் ஆறுமுகத்திடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.