தில்லை மகா காளியம்மன் கோவிலில் திருநடன வீதியுலா


தில்லை மகா காளியம்மன் கோவிலில் திருநடன வீதியுலா
x

தில்லை மகா காளியம்மன் கோவிலில் திருநடன வீதியுலா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை அருகே தா.பழூர் சாலையில் தில்லை மகா காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருநடன வீதியுலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான உற்சவம் கடந்த 21-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 28-ந்தேதி அக்னி கரகத்துடன் சாமி புறப்பட்டு, தில்லை காளியம்மன் கருவறையில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் முக்கிய நிகழ்வான தில்லை மகா காளியம்மன் திருநடன உற்சவமானது காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்று ஒரு மண்டலம் விரதம் இருந்து அம்மனின் அனுமதி பெற்ற நபர் அம்மனின் முகம் கைகளில் நகைகள், புடவை போன்றவற்றை அணிந்துகொண்டு அம்மன் வேடமாக நடனமாடி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி வீடுதோறும் சென்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். தொடர்ந்து திருநடன வீதியுலா நிகழ்வானது நடைபெற்று வருகிறது. இந்த வீதியுலா வருகிற 5-ந்தேதி வரை நடைபெறும். 6-ந்தேதி தில்லை மகா காளியம்மன் கோவிலுக்கு அம்மன் வந்தடைவார். தொடர்ந்து அன்றே அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.


Next Story