திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

புவனகிரி அருகே திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

கடலூர்

புவனகிரி,

புவனகிரி அருகே பெருமாத்தூரில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கர்ணன் பிறப்பு, தர்மர் பிறப்பு, ஸ்ரீ கிருஷ்ண பிறப்பு, சகாதேவன் பிறப்பு, அம்மன் பிறப்பு, பாஞ்சாலிசபதம், பகாசூரன் சண்டை, வில் வளைப்பு, அம்மன் திருக்கல்யாணம், அர்ஜுனன் தபசு, அரவான் ஊர்வலம், அரவான் பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து திரவுபதி அம்மன் கூந்தல் முடிப்பு நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீமித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து மஞ்சள் நீர் விளையாட்டு, தர்மர் பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story