திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலப்பழூவூர் ஊராட்சி கீழையூர் கிராமத்திலுள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, பட்டு உடுத்தி சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின் பஞ்சபாண்டவர்களின் சிலைகள் ஆட்டோ மூலம் ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக கொண்டு சென்று தீமிதி திடலை சென்றடைந்தனர். பின்னர் அம்மனுக்கு வேண்டியிருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி சுமந்து கொண்டும், அலகு குத்திக்கொண்டும், கரகம் ஏந்தியும், அவர்களது குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டும் ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்து திடலில் இறங்கி தீயில் நடந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story