திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
திருத்துறைப்பூண்டி அருகே திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன் கோட்டகம் வடபாதியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு காப்புகட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் தினமும் மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட கதாகளஞ்சியம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் கோவில் எதிர்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர், கிராமமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story