திம்பம் மலைப்பாதையில் மரத்தில் சரக்கு வேன் மோதி விபத்து


திம்பம் மலைப்பாதையில்  மரத்தில் சரக்கு வேன் மோதி விபத்து
x

திம்பம் மலைப்பாதையில் மரத்தில் சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய பாதையாக திம்பம் மலைப்பாதை உள்ளது. இதனால் இந்த மலைப்பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சரக்கு வேன் ஒன்று கோவைக்கு புறப்பட்டது. இந்த சரக்கு வேன் நேற்று முன்தினம் திம்பம் மலைப்பாதையின் 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story