திம்பம் மலைப்பாதையில் கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து


திம்பம் மலைப்பாதையில்   கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து
x

திம்பம் மலைப்பாதையில் கரும்பு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஈரோடு

தாளவாடி

தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதை 24-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். சாலையோரத்தில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்ெகாண்டு வருகிறார்கள்.


Next Story