திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 23 May 2022 12:25 PM GMT (Updated: 2022-05-23T18:00:35+05:30)

பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் செல்லாத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நேற்று இரவு நடைபெற்றது.

திருவள்ளூர்

இதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காப்பு கட்டிய பக்தர்கள் தீமிதி விழாவில் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

இந்த விழாவில் ஆர்.கே.பேட்டை, செல்லாத்தூர் சுற்றுப்புறங்களை சேர்ந்த கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு திரவுபதி அம்மன் கோவில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.


Next Story