குன்னம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி


குன்னம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
x

குன்னம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் 12-ம் ஆண்டு புரட்டாசி திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூபமும், அதனை தொடர்ந்து கோ பூஜை, ஸ்தயனா, திருமஞ்சனம் முதல் கால பிரசாத வினியோகம், பின்னர் திருக்கல்யாண பெருவிழாவும், ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் மாலை பெருமாள் கருட வாகனத்தில் வாண வேடிக்கையுடன் கூடிய திருவீதி உலாவும் நடைபெற்றது. இரவு பள்ளியறை சேவையும் நடந்தது. நிகழ்ச்சியில் குன்னம் மற்றும் சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.


Next Story