ராம்ஜிநகர் பாவநாராயண சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ராம்ஜிநகர் பாவநாராயண சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
திருச்சி
திருச்சி ராம்ஜிநகர் ஹரிபாஸ்கர் காலனியில் ஸ்ரீ மார்க்கண்டேய யாகபுத்திரா ஸ்ரீ பத்ராவதி தாயார் சமேத ஸ்ரீ பாவநாராயண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் சாமி சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீ பத்ராவதி தாயார் சமேத ஸ்ரீ பாவநாராயண சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருக்கல்யாண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கு அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. அதன்பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவில் சுவாமி புலி வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
Related Tags :
Next Story