மச்சபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்


மச்சபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
x

மச்சபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது

தஞ்சாவூர்

பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை தேவராயன்பேட்டையில் அமைந்துள்ள சுகந்த குந்தளாம்பிகை சமேத மச்சபுரீஸ்வரர் கோவிலில் 12-ம் ஆண்டு வருஷாபிஷேக திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதனை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமமும், மகா தீபாராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து மகாமாரியம்மன் கோவிலில் இருந்து பெண்கள் பூக்கள், பழ வகைகள், பட்டு வஸ்திரங்கள் உள்பட சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். அதனைத்தொடர்ந்து சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள் மற்றும் கிராமமக்கள் செய்து இருந்தனர்.


Next Story