திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி கையெழுத்து இயக்கம்


திருக்குறளை தேசிய நூலாக   அறிவிக்க கோரி கையெழுத்து இயக்கம்
x

கோவில்பட்டியில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி கையெழுத்து இயக்கம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகரசபை ராமசாமி தாஸ் பூங்கா முன்பு உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பாக, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில துணை செயலாளர் பேராசிரியர் கருத்தப்பாண்டி தலைமை தாங்கினார். நகரசபை தலைவர் கா. கருணாநிதி முதல் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் ஆர்வமுடன் கையெழுத்தை பதிவு செய்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தமிழரசன், திருவள்ளுவர் மன்ற செயலாளர் சீனிவாசன், துணைத் தலைவர் திருமலை முத்துசாமி, கம்பன் கழகம் ராஜாமணி, மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story