திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்


திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள சிவானந்தவல்லி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான வசந்த உற்சவ விழா கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை, வீதிஉலா, பொம்மை பூ சூட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நேற்று முன் தினம் மன்மதன் தகனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு முன்பு மன்மதன் சிலை கையில் வில்லுடன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்து. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய, வீரட்டானேஸ்வரர் கையில் இருந்து அக்னி அம்பு மன்மதன் மீது பட்டவுடன் அந்த சிலை எரிந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர்கள், உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் செய்திருந்தனர்.


Next Story