திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளியில் கழிவுநீரால் மாணவிகள் அவதி


திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளியில் கழிவுநீரால் மாணவிகள் அவதி
x

திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளியில் கழிவுநீரால் மாணவிகள் அவதி

மதுரை

திருமங்கலம்

திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1800 மாணவிகள் பயின்று வருகின்றனர். திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக விளங்கக்கூடிய அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கழிவு நீர் செல்லக்கூடிய பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. கழிவு நீர் செல்ல வழி இன்றி பாதாள சாக்கடை வழியாக பள்ளி வளாகத்திற்கு குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு உள்ளே அமர்ந்து பணி செய்ய முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனை நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அடைப்பை சரி செய்ய வேண்டும் என பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆசிரியர்கள் உரிய முறையில் பாடம் நடத்தவும் மாணவிகள் கவனிக்கவும் முடியவில்லை என புகார் தெரிவித்தனர். பாதாள சாக்கடையை சீரமைத்து அடைப்பை சரி செய்ய வேண்டும் என மாணவிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story